
தமிழகத்தில் விரைவில் திராவிட கட்சிகள் காணாமல் போகும். பாஜக ஆட்சி அமைக்கும். என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுபற்றி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினர் ‘மாநில சுயாட்சி’ என பேசி வருகின்றனர். திமுகவின் தற்போதைய நிலை தண்ணீரில் மூழ்கி வரும் ஒரு கப்பல் போல உள்ளது. தமிழகத்தில் மட்டும் தமிழே படிக்காமல் பிஎச்டி வரை படிக்கும் நிலை உள்ளது.
தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் திராவிட கட்சிகள் காணாமல் போகும். பாஜக ஆட்சி அமைக்கும்.
மாணவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வு மத்திய அரசு மூலம் கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசின் கல்வி கொள்கையை தான் மாணவர்கள் எதிர்க்க வேண்டும், நீட் தேர்வை அல்ல. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் திறமையாக வர முடியும்.
விவசாயிகள் பிரச்சனையை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும். அதனை விடுத்து, மத்திய அரசு மீது குறை கூறுவது, ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.