
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது.
இதில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்த பிரச்சனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தில், ஒவ்வொரு துறை குறித்து விவாதம் நடத்த இருப்பதால், இந்த மாதம் முழுவதும் சட்டமன்றம் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்கள் குறைவாக இருந்தால், அடுத்த மாதம் முதல் வாரம் வரையும் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தங்களுடன் இணைந்துவிட்டால், அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இரு அணிகளும் இணைவது குறித்த நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஆலோசனையும் நடந்து வருகிறது.
இதனால், சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான அறிக்கை தயார் செய்து கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதனை பரிசீலனை செய்யும் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அவர்களுக்கு பதவி பிரமாணம்செய்வதுடன், சட்டப்பேரவை கூட்டம் நடத்த அனுமதி அளிப்பார்.