விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடகோட்டிபாக்கத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (52). திண்டிவனம் சட்டமன்ற அதிமுக எம்எல்ஏவான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது.
திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடகோட்டிபாக்கத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (52). திண்டிவனம் சட்டமன்ற அதிமுக எம்எல்ஏவான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதோடு, மருத்துவர்கள் அறிவுரைப்படி கொரோனாவுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இவர் 2 கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.