கோ பேக் மோடிக்கு பதிலடியாக கோ பேக் ராகுல் என்ற இயக்கம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து துவங்கும் யாத்திரையின் போது இது நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கோ பேக் மோடிக்கு பதிலடியாக கோ பேக் ராகுல் என்ற இயக்கம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து துவங்கும் யாத்திரையின் போது இது நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த ஒவ்வொரு முறையும் கோ பேக் மோடி என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆனது, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் தொடங்கி அவர் கலந்து கொண்ட ஐஐடி வளாகம் வரையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு அது பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை... கண்டு கொள்ளாத திமுக அரசு...! அன்புமணி ஆவேசம்
அன்று முதல் இன்று வரையிலும் கூட அவர் தமிழகத்திற்கு வருகை தரும்போது கோபேக் மோடி என்ற வாசகம் ரெண்டு செய்யப்பட்டு வருகிறது. இது பாஜக மற்றும் இந்து இயக்கங்களுக்கு பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது, இந்நிலையில்தான் செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் யாத்திரை தொடங்க உள்ளது, அதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள்: அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை...! நா வடக்கத்துடன் பேச வேண்டும்- கே.பாலகிருஷ்ணன் அறிவுரை
அந்த பாதையாத்திரை மொத்தம் 500 கிலோமீட்டர் தூரம் 150 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில்தான் பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கோ-பேக் ராகுல் இயக்கம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- சீனா பரப்பிய கொரோனாவை மோடி அரசால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டு விரட்டினோம், வாரிசு அரசியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுச்சியுடன் அகற்றுவார், எட்டு வழி சாலையை எதிர்க்கவில்லை என இப்போதே திமுக அமைச்சர் எ.வ வேலு கூறுகிறார், தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைய வேண்டும், இதேபோல் ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து தொடங்க உள்ள பாதயாத்திரையின் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோ பேக் ராகுல் இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என அவர் அறிவித்தார்.