தமிழகம் முழுவதும் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறாங்க.! முழு நேர அரசியலுக்கு வாங்க... உதய்க்கு சேகர்பாபு அழைப்பு

By Ajmal KhanFirst Published Sep 5, 2022, 9:57 AM IST
Highlights

 சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மட்டும் உங்கள் தொகுதி அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக அரசியலில் நீங்கள் பயணிக்க வேண்டும் என உதயநிதியிடம், சேகர்பாபு  கேட்டுக்கொண்டுள்ளார்.
 

திமுக வெற்றி- உதயநிதி பங்கு

திமுக தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில் திமுக 2006ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அமரவில்லை. இதனால் திமுக தொண்டர்கள் வேதனைப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு   நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காக உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் கூறினர். குறிப்பாக  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அதிமுக தான் அனைத்து முயற்சிகளும் எடுத்ததாக கூறிய நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஒத்த செங்கல் தான் உள்ளது என பிரச்சாரத்தில் கூறி அனைவரையும் அசர வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது.

உதயநிதிக்கு எப்போது அமைச்சர் பதவி

ஆனால் தற்போது வரை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பேச்சு தீவிரமாக இருந்தது. உதயநிதியும் தான் நடிக்கும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என நிகழ்ச்சியில் கூறி வந்தார். ஆனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே அமைந்தது. இந்தநிலையில்,  சென்னை துறைமுகம் பகுதி திமுக சார்பில் உடன்பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி, தையல் இயந்திரங்கள், லேப்டாப், கல்வி உதவித் தொகை, ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கழகத் தலைவரின் வார்ப்பு உதயநிதிக்கு எங்கள் தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் முழு நேர அரசியலுக்குத் திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களை வரவேற்க பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. 

மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து..!

முழு நேர அரசியலுக்கு வாங்க

நீங்கள் போகும் இடமெல்லாம் பல்லாயிரக் கணக்கான மக்கள் உங்கள் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் எனவே முழு நேர அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசியவர்,  உதயநிதிக்கு சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மட்டும் அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும் என சேகர்பாபு  கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை...! நா வடக்கத்துடன் பேச வேண்டும்- கே.பாலகிருஷ்ணன் அறிவுரை


 

click me!