உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம்..?? அமைச்சர் கே.என் நேரு வெளியிட்ட பரபரப்பு தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 11:15 AM IST
Highlights

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அடையாரில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். 

வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க முயற்சி செய்து வருவதாகவும், வார்டு வரையறை பணிகள் நடந்து வருவதால் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது எனவும் நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் கே.என் நேரு தகவல் தெரிவித்துள்ளார். புதிதாக வரையறை செய்யப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அந்த 9  மாவட்டங்களிலும் முறையாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது. 

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அடையாரில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர் கூறியதாவது, திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்புச் செய்து வருகிறது. இந்நிலையில் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் திமுக அரசு தரம் உயர்த்தி வருகிறது. 

அதேபோல ஊரக உள்ளாட்சி பகுதிகளில்  எல்லாம் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது, இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை  நடத்துவதற்கு நீதமன்றத்தில் கால அவகாசம்  கேட்கப்பட்டுள்ளது, எனவே நீதிமன்றத்தின் முடிவை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு செய்யப்படும். மொத்தத்தில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், முதலமைச்சரும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார். தமிழக தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.

 

click me!