அய்யய்யோ.. பல நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை..? 200 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 10:48 AM IST
Highlights

இதன் தொடர்ச்சியாக சென்னையில் காசிமேடு, நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள குடோன்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய அதிகாரிகள், மீன் வியாபாரிகள் பார்மலின் அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும், நல்ல தரமான மீன்களை மக்களுக்கு விற்பனை செய்யுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

சிந்தாதிரிபேட்டை தனியார் மீன் குடோனில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 200 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  உள்ள கே.கே.எஸ். அன் கோ என்ற தனியாருக்கு சொந்தமான மீன் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

 

இந்த ஆய்வின் போது கெட்டு போன  மீன்களா, அல்லது பார்மலின் செலுத்திய மீன்களா என்று சோதனை செய்தும் பார்த்தனர். பல நாட்களுக்கு முன்பு பிடித்த மீன்கள் பதுக்கி வைத்திருந்ததால் அவை கெட்டுப்போய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றை ரசாயன மருந்துகள் தெளித்து விற்பனைக்கு அனுப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.அதன் பின்பு பேசிய  சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார், இன்று நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 200 கிலோ அளவிலான  கெட்டுப்போன மீன் வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் காசிமேடு, நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள குடோன்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய அதிகாரிகள், மீன் வியாபாரிகள் பார்மலின் அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும், நல்ல தரமான மீன்களை மக்களுக்கு விற்பனை செய்யுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார். எனவே பார்மலின் மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடித்தால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட மீன்கள் ஆந்திரா மாநிலத்தில் பல நாட்களுக்கு முன்பு பிடித்தது என்றும், அதனை பதப்படுத்தி விற்பனை செய்யவும் வியாபாரிகள் முயற்சி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

click me!