கொடநாடு கொலை வழக்கு.. விசாரணைக்கு தடை வருமா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

By vinoth kumarFirst Published Sep 4, 2021, 10:41 AM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் சாட்சியான அனுபவ் ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறைக்கு மேல் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடைகோரிய மனு செப்டம்பர் 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் சாட்சியான அனுபவ் ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறைக்கு மேல் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது. 

இந்நிலையில்,  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி  மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!