மோடியை மிக மட்டமாக விமரிசித்து அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கும் பிரபல அமெரிக்க பத்திரிகை...

By Muthurama LingamFirst Published May 10, 2019, 2:43 PM IST
Highlights

மோடி இந்தியாவைப் பிரித்தாளும் தலைவர் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று கடுமையாக விமரிசித்து அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க.வினர் அவரை "India's Driver in Chief"என்று புகழ்ந்துகொண்டிருக்க அந்த இதழ் மோடியை  "India's Divider in Chief"என்று தாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம் இதழ் மே 20ம் தேதியிடப்பட்ட அட்டைப்படக் கட்டுரையில் மோடியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் மோடி தனது அரசியல் லாபத்துக்காக இந்து முஸ்லீம்களிடையே மனக்கசப்பை வளர்த்து பிரித்து ஆளுவதாகவும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ,தான் நாட்டின் பிரதமர் என்பதை மறந்து இந்துக்கள் பக்கம் மட்டுமே நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்னுமொரு 5 ஆண்டுகளுக்கு மோடியை சகித்துக்கொள்ளத்தான் போகிறதா? என்ற கேள்வியை உள்ளடக்கிய அக்கட்டுரை இன்னும் மூன்று கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில் சந்தைக்கு வந்திருப்பது  சவுகிதாருக்கு எதிராக சில விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

click me!