முதலமைச்சர் தினகரன் தலைமையில் அமைச்சரவை லிஸ்ட் ரெடி..! அதில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் என்ன துறை தெரியுமா..?

By Vishnu PriyaFirst Published May 10, 2019, 2:29 PM IST
Highlights

ஆயிரம் தான் சிபாரிசு வழியில் வந்தாலும் கூட ‘சுயம்புத்தன்மை’ இல்லையென்றால் அரசியலில் நின்று விளையாடவே முடியாது. அதிலும் ஜெயலலிதா, சசிகலா எனும் இரண்டு சென்சிடீவ் லேடி சிங்கங்கள் ஆட்சி செய்தபோது அ.தி.மு.க.வின் உச்ச பதவியில் தாக்குப் பிடிப்பதென்பது லேசுப்படாத காரியம். ஆனால் அதை சாதித்துக் காட்டியவர் பெங்களூரு புகழேந்தி. அதனால்தான் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியில் தொடர்ந்து இருந்தார்.

ஆயிரம் தான் சிபாரிசு வழியில் வந்தாலும் கூட ‘சுயம்புத்தன்மை’ இல்லையென்றால் அரசியலில் நின்று விளையாடவே முடியாது. அதிலும் ஜெயலலிதா, சசிகலா எனும் இரண்டு சென்சிடீவ் லேடி சிங்கங்கள் ஆட்சி செய்தபோது அ.தி.மு.க.வின் உச்ச பதவியில் தாக்குப் பிடிப்பதென்பது லேசுப்படாத காரியம். ஆனால் அதை சாதித்துக் காட்டியவர் பெங்களூரு புகழேந்தி. அதனால்தான் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியில் தொடர்ந்து இருந்தார்.
 
தன் சொந்த மண் என்பதால் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா மீது அதிக நேசம் உண்டு. அவர் சார்பாக அந்த மண்ணில் அடிக்கடி பர்ஷனலாகவும், பொலிடிக்கலியும் சில நிகழ்வுகள் சப்தமின்றி நடக்கும். அவற்றை சலனமேயில்லாமல் முடித்துக் கொடுத்தவர். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது புகழேந்தி நடத்திய சித்து விளையாட்டுகள் அசாதாரணமானவை. ஜெ.,வை விட சசியிடம் ஏக விஸ்வாசம் காட்டினார். அது இன்றும் தொடர்கிறது.

 

அதனால்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னும் சசிக்கு சாதகமாக இருந்து கொண்டிருக்கிறார். பரப்பன சிறைக்குள் இருக்கும் சசிக்கு பல்பொடி வாங்கிக் கொடுப்பதில் துவங்கி, அவர் பரோலில் வரும்போது ஜாமீன் கையெழுத்து போடுவது வரை எல்லாமே இந்த புகழேந்திதான். இப்போது தினகரனின் அ.ம.மு.க.வின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வன் ‘தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவோம்.’ என்று சொல்லி ஒரு அரசியல் பதற்றத்தைப் பற்ற வைத்திருக்கும் நிலையில் இவையெல்லாம் குறித்து வாய் திறந்திருக்கும் புகழேந்தி  கன்னாபின்னாவென ஓவர் டோஸாய் பேசியிருக்கிறார் இப்படி....

“தலைவருக்கும், அம்மாவுக்கும் வாழ்நாள் எதிரியாக இருந்தது தி.மு.க.தான். அதே நிலைதான் இப்போதும். சின்னம்மா, தினகரன் இருவரும் தி.மு.க.வை அப்படித்தான் பார்க்கிறார்கள். எனவே தங்கத்தமிழ்செல்வன் ‘தி.மு.க.வோடு சேர்ந்து’ என்கிற வார்த்தையை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். நாங்களும், தி.மு.க.வும் இணைந்துதான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில்லை, தானாகவே இந்த ஆட்சி கவிழும். தி.மு.க.வோடு எந்த காலத்திலும் எங்களுக்கு ஒட்டும், உறவும் கிடையாது. 

ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்க்கணும்...எங்கள் கையில் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதே ஸ்டாலின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால், நாங்களும் ஸ்டாலினோடு சேர்ந்த அந்த முடிவை எடுத்திருந்தால் இந்த ஆட்சி அப்போதே கவிழ்ந்து போயிருக்கும். அன்றைக்கே ஸ்டாலினை முதல்வராக்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் எந்த காலத்திலும் தி.மு.க.வுக்கு நட்பு முகம் காட்ட மாட்டோம்.” என்று சொல்லியிருப்பவர், “விரைவில் இந்த ஆட்சி கவிழும், ஆட்சியும் கட்சியும் தினகரனின் கரங்களுக்கு  தானாக வந்து சேரும். ஒரு சில அமைச்சர்களை விலக்கிவிட்டு, தலைவர் தினகரன் முதல்வராக அமர்ந்து நல்லாட்சியை துவக்குவார் அம்மா வழியில். விலக்கப்பட இருக்கும் அமைச்சர்களில் நிச்சய்மாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இருக்கிறது. அவர்கள் இருவரும் வீட்டுக்குச் சென்றால் மட்டுமே அங்கு சமாதானம்.” என்றிருக்கிறார். கற்பனைகள் இலவசம்தானே!

click me!