காலாவதியான அமித்ஷா..! கத்தி முனையில் தமிழிசை... பி.ஜே.பி.யில் களேபரங்கள்..!

By Vishnu PriyaFirst Published May 10, 2019, 2:18 PM IST
Highlights

பி.ஜே.பி.க்கு நடந்து முடிந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்ன மாதிரியான தீர்ப்பை தரப்போகிறதோ! என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பி.ஜே.பி.க்குள் நடக்க இருக்கும் சென்சிடீவ் தேர்தல் ஒன்றைப் பற்றி அக்கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகள் அலச துவங்கியிருப்பது தெரியுமா?

பி.ஜே.பி.க்கு நடந்து முடிந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்ன மாதிரியான தீர்ப்பை தரப்போகிறதோ! என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால், பி.ஜே.பி.க்குள் நடக்க இருக்கும் சென்சிடீவ் தேர்தல் ஒன்றைப் பற்றி அக்கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகள் அலச துவங்கியிருப்பது தெரியுமா?....பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் மற்றும் தமிழக தலைவர் என இரண்டு பதவிகளுக்கும் விரைவில் மாற்றம் வர இருக்கிறது. அக்கட்சியின் விதிகளின்படி அகில இந்திய தலைவரின் பதவியானது மூன்று ஆண்டுகள். ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். அந்த வகையில் அகில இந்திய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் எப்பவோ காலாவதியாகிவிட்டது. 

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல்தான் தமிழக தலைவரின் பதவிக்காலமும் முடிந்துவிட்ட நிலையில், தமிழிசையின் பதவி இப்பவோ, அப்பவோ போகும் நிலையில் இருக்கிறது! என்கிறார்கள். அகில இந்திய தலைவர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதில் யாரையும் கொண்டு வந்து உட்கார வைக்கும் கெத்து மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இருக்கிறது. ஆனால் தமிழக தலைவர் பதவியிலிருந்து தமிழிசைக்கு கல்தா கொடுக்கப்பட்டால், அதைப் பிடிக்க சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரை டஜன் நபர்கள் முயல்வதாக தகவல். அதிலும் சிலரோ வெகு சீரியஸாக வெறித்தனமாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்களாம். 

இது பற்றிப் பேசியிருக்கும் பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் “தமிழிசையின் பதவிகாலம் முடிந்து போனது உண்மைதான். ஆனால் நீட்டிக்கப்பட்ட காலம் முடிய இன்னும் அவகாசம் இருக்குது. இதை டெக்னிக்கலா பார்த்தால், தமிழிசையே மீண்டும் தலைவராக வாய்ப்புள்ளது. காரணம், 2014 தேர்தலில் வென்று பொன்னார் மத்தியமைச்சரானார். அதனால் தமிழிசை தலைவரானார். ஒன்றரை வருட காலத்திற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2016ல் தான் முறைப்படி அவர் மூன்று ஆண்டுகளுக்கு தலைவரானார். எனவே அவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் எங்கள் கட்சியில் ‘இவர்தான் தலைவராக வருவார் ’ என்று சொல்லிட முடியாது.” என்றிருக்கிறார்.

 

இச்சூழலில், தமிழிசையே மீண்டும் தலைவராக வாய்ப்புள்ளது...என்பதை தமிழக பி.ஜே.பி.யின் வி.ஐ.பி.க்கள் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. ’அகில இந்திய அளவில் கட்சி எவ்வளவோ வளர்ந்திருந்தும், தமிழகத்துக்கு அமித்ஷாஜியே பிரத்யேக கவனம் செலுத்தியும் கூட இங்கே கட்சி வளராததற்கு தலைமை சரியில்லாததே காரணம். எனவே மீண்டும் தமிழிசை வந்தால் கவுன்சிலர் சீட் அளவுக்கு கூட முன்னேற மாட்டோம். எங்களில் யாரை தேர்வு செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் தமிழிசை வேண்டவே வேண்டாம்.” என்று டெல்லிக்கு தாக்கீது அனுப்பியுள்ளனராம். ஆக மொத்தத்தில் தமிழக பி.ஜே.பி.யின் தலைவர் பதவி கத்தி முனையிலிருக்கிறது போங்கள். அவ்வ்வ்............

click me!