நான் கடவுள்..! எங்கள் வேட்பாளர்க எல்லாம் முருக பக்தர்கள்... குடைசாய்ந்த துரைமுருகன்... துவைத்தெடுக்கும் அ.தி.மு.க..!

By Vishnu Priya  |  First Published May 10, 2019, 1:32 PM IST

தமிழகத்தைப் பொறுத்தவரையில் செம்ம காமெடி என்னவென்றால் அது....’தி.மு.க. ஒரு பகுத்தறிவு இயக்கம்.’ என்பதுதான். காரணம், ’கடவுளை மற! மனிதனை நினை!’ என்று சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க. தன்னையும் பகுத்தறிவு இயக்கமாகத்தான் வெளியில் சீன் போடும்.  கடவுளை மற! என்றால் எல்லா கடவுள்களையும்தானே? ஆனால் இக்கட்சியை பொறுத்தவரையில் இந்துக்கடவுள்களை மட்டுமே விமர்சிப்பார்கள்.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் செம்ம காமெடி என்னவென்றால் அது....’தி.மு.க. ஒரு பகுத்தறிவு இயக்கம்.’ என்பதுதான். காரணம், ’கடவுளை மற! மனிதனை நினை!’ என்று சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க. தன்னையும் பகுத்தறிவு இயக்கமாகத்தான் வெளியில் சீன் போடும்.  கடவுளை மற! என்றால் எல்லா கடவுள்களையும்தானே? ஆனால் இக்கட்சியை பொறுத்தவரையில் இந்துக்கடவுள்களை மட்டுமே விமர்சிப்பார்கள்.

ஆனால் சிறுபான்மையினரின்  இறைவர்களை இவர்களே போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். காரணம்? அந்த சமுதாயத்தின் வாக்கு வங்கி தங்களை நிச்சயம் ஆதரிக்கும்! எனும் நம்பிக்கையில்தான். இந்துக்களைப் பற்றியும், இந்து கடவுள்களைப் பற்றியும், இந்துக்களின் வழிபாடு மற்றும் சம்பிரதாய முறை பற்றியும் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய தலைகள் பேசாத பேச்சில்லை. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்துக்களின் எதிரி தி.மு.க.’ என்று பி.ஜே.பி.கூட்டணி பகுதியிலிருந்து ஒரு விமர்சனம் எழுந்து, இந்து வாக்கு வங்கியை மிக முழுமையாக தி.மு.க.வுக்கு எதிராக திருப்பும் முயற்சி நடந்தது. அதனால் தொபுக்கடீர் என்று இந்துக்களின் பக்கம் தாவி விழுந்து, ‘நாங்க உங்கள் நண்பேன்’ என்று தலையை சொறிகிறது அந்த கட்சி. 

இந்நிலையில், கருணாநிதியின் நிழலாக வர்ணிக்கப்பட்டவரும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன்  சமீபத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய வந்த இடத்தில் “எங்களை குறிப்பிட்ட மக்களுக்கு எதிரியாக சித்தரிக்கும் வேலை நடக்கிறது. ஆனால் அது எடுபடாது. ஒரு விஷயத்தை கவனியுங்கள். இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு தொகுதியிலும் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முருக பக்தர்கள்தான். அவர்களின் பெயரை கவனியுங்கள்...இந்த ஓட்டப்பிடாரத்தில் ‘சண்முக’ய்யாவும், திருப்பரங்குன்றத்தில் சரவணனும், அரவக்குறிச்சியில் ‘செந்தில்’பாலாஜியும், சூலூரில் ‘பழனி’சாமியும் போட்டியிடுகிறார்கள். 

இவர்கள் நால்வரின் பெயரிலேயே முருகன் இருக்கிறார். இவர்கள் முருகனின் பெயரை தாங்கிய முருக பக்தர்களே. இந்த துரை முருகனே இதை சொல்லியபின் வேறென்ன வேண்டும்? நான் பதினோறு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். ஓட்டுப் போட்ட மக்களுக்கு நான் கடவுள் போல உதவிகள் செய்வதுதான் என் வெற்றிக்கு காரணம்.” என்று குடைசாய்ந்துவிட்டார். ஏற்கனவே வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக துரைமுருகனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க., இப்போது இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு “தேர்தல் அரசியலுக்காக கட்சியின் பாரம்பரிய கொள்கைகளை தெருவில் வீசியிருக்கிறார் துரைமுருகன். கருணாநிதி இல்லாத தி.மு.க.வில் வயதான துரைமுருகன் துள்ளிக் குதித்து ஆடுகிறார். அதைத் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்கு தெம்பில்லை.” என்று பொளக்கின்றனர் போட்டு.

click me!