அவசர அவசரமாக மும்பைக்கு செல்லும் ஸ்டாலின்! செந்தில் பாலாஜிக்கு சொல்லப்பட்ட தகவல் என்ன?

Published : Dec 12, 2018, 09:08 PM IST
அவசர அவசரமாக மும்பைக்கு செல்லும் ஸ்டாலின்! செந்தில் பாலாஜிக்கு சொல்லப்பட்ட தகவல் என்ன?

சுருக்கம்

நாளை மதியம்  ஒரு மணி அளவில் இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என திமுக தரப்பிலிருந்து சென்னையில் தங்கியிருக்கும் செந்தில் பாலாஜிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. 

கரூரைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி நாளை காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வந்தது. இதனால் திமுக அறிவாலயத்தில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாளை திமுகவில் இணைய செந்தில் பாலாஜியும் அவசர அவசரமாக சென்னை வந்தனர்.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில்  பங்கேற்க இன்று மாலையே மும்பை கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.  திருமண நிகழ்ச்சி முடிந்து நாளை மதியம் 12.30 மணிக்குத்தான் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து நாளை மதியம் நேரடியாக  அறிவாலயம் வரும் ஸ்டாலின் மதியம் ஒரு மணி அளவில் இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என சென்னையில் தங்கியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு  தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.  

கொங்கு மண்டலத்தில் திமுக சற்று பலவீனமாகவே இருக்கிறது. ஒரு நல்ல தலைமை இல்லை.  அதைச் சரிசெய்து திமுகவின் வலிமையைக் கூட்டுகிறேன் என்றும், அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் செந்தில் பாலாஜி  சொன்னதால்  ஸ்டாலின் சம்மதம் சொன்னதாக தகவல் கிடைத்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!