மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு கனவை சிதைத்த காங்கிரஸின் வெற்றி... இப்படியொரு உள்குத்தா...?

By vinoth kumarFirst Published Dec 12, 2018, 7:17 PM IST
Highlights

கூட்டணி கட்சிகளால் மட்டுமே கரையேற முடியும் என்கிற மனநிலையில் இருந்த காங்கிரஸ் ஆட்சியமைக்க பிரதமர் நாற்காலியை விட்டுத்தரக்கூட தயாராக இருந்தது. ஆனால் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸை உற்சாகத்தில் ஆழ்த்தி ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என கூட்டணிக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

கூட்டணி கட்சிகளால் மட்டுமே கரையேற முடியும் என்கிற மனநிலையில் இருந்த காங்கிரஸ் ஆட்சியமைக்க பிரதமர் நாற்காலியை விட்டுத்தரக்கூட தயாராக இருந்தது. ஆனால் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸை உற்சாகத்தில் ஆழ்த்தி ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என கூட்டணிக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

பாஜக மூளையாக அமித் ஷா இருந்ததைப் போல காங்கிரஸ் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முக்கியப்பங்காற்றி வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த மக்களவை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு வருகிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியை சந்தித்து பேசினார். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் அவரது தந்தை தேவகவுடாவையும் சந்தித்துப்பேசினார்.

நவம்பர் 1ம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூட்டணியை உறுதி செய்தார். காங்கிரசும் - தெலுங்கு தேசமும் பரம எதிரிகளாக ஆந்திராவில் கருதப்பட்ட நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்தையும் கைவிட்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அடுத்து தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப்பேசினார். இந்த முன்னெடுப்புகளுக்கு காரணம், மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் தான் பிரதமராக வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். 

அப்படி ஒரு சூழல் வந்தால் ஆந்திராவில் தற்போது அமைச்சராக உள்ள தன் மகன் லோகேஷை, முதல்வர் ஆக்கிவிட்டு, டெல்லி அரசியலில் குதிரை ஓட்டலாம் என்கிற திட்டத்தில் இருந்தார். அதற்காக ஒவ்வொரு மாநிலமாகச் சென்று அரசியல் தலைவர்களை பார்த்து பேசி வந்தார். சென்னையில் ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தலைவர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள்தான். மோடியைக் காட்டிலும் ஸ்டாலின் சிறந்த தலைவர்தான். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார்கள்'' என்றார். ராகுல் காந்தி கூட்டணிக்குத் தலைவராக இருக்க தகுதியானவரா? எனக் கேட்டதற்கு ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். மிகப்பெரிய தேசியக்கட்சியான காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான தலைவர்கள் இருக்கிறார்கள்' என மலுப்பலாக பதில் கூறினார். ராகுல் காந்தி தலைமையை ஏற்பதாக அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ஆக மொத்தத்தில் இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்து பிரதமருக்கான அந்தஸ்தை காட்டிக்கொள்ள அவர் முணைந்து வந்தார். மு.க.ஸ்டாலினை துணை பிரதமாராக்கும் யோசனையும் அவர் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர்களது ஆசையை நிராசையாகி இருக்கிறது ஐந்து மாநில இடைத்தேர்தல் ரிசல்ட். 

இந்த வெற்றியால் காங்கிரஸ் புத்துணர்வு பெற்று ராகும் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்னும் நிலை உருவாகி இருக்கிறது. 

click me!