''போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு. கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்.
undefined
மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !
மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல. அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்து மதத்தினரை அவதூறாக பேசி வரும் அ.ராசா மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒற்றை தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவிற்கு எதிராக உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
தமிழகத்தில் இனி வரும் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும்" என்று பேசினார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
மேலும் செய்திகளுக்கு..காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்