கட்சிக்கு ஸ்கெட்ச் போட்ட உதய்... ஸ்டாலின் இடம் கொடுத்த லிஸ்ட்... ஷாக்கில் சீனியர்ஸ்

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2022, 1:42 PM IST
Highlights

திமுக மாவட்ட செயலாளர்கள்  தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அப்பதவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ஆதரவாளர்களை பட்டியலை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள்  தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அப்பதவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ஆதரவாளர்களை பட்டியலை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே  தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி  வைத்துள்ள நிலையில், தனது நம்பிக்கைக்குரியவர்களை மாவட்ட செயலாளராக அவர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி ஆக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும்  சரி,  கட்சியில் தங்களுக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கி அதன் மூலமே அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர் என்பது வரலாறு, ஆனால் சற்று வித்தியாசமாக தனது இளமை பருவித்தில்,  சினிமா பிசினஸ் என இருந்த உதயநிதி ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலில் இறங்கி சட்டமன்ற உறுப்பினராகவும் தற்போது வலம் வருகிறார். இதற்குள் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் வைத்து  கட்சியினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதி  திமுக தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எப்படி தனக்கான செல்வாக்கை கட்சியில் உயர்த்திக் கொண்டாரோ, அதற்காக தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை எப்படி உருவாக்கிக் கொண்டாரோ, அதேபோன்ற பாணியில் உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

 சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதியை அமைச்சராக அறிவிக்க வேண்டும் என ஒரு சில அமைச்சர்களை தவிர 90% அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி தான் திமுக என்பது தற்போதைய உருவாகத் தொடங்கிவிட்டது. ஆனாலும் கட்சியில் தனக்கென செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதில் தந்தை ஸ்டாலினைப் போலவே உதயநிதியை இப்போதே செயல்பட தொடங்கி விட்டார் என்றே கூறலாம். 

இதையும் படியுங்கள்:  லஞ்ச ஒழிப்பு சோதனை: அதிமுக மாஜி அமைச்சர்கள்தான் தங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்- ஓபிஎஸ்.

எந்த பதவியியை எடுத்தாலும் அதில் அதிகார மையத்தில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களை முன்னிறுத்துவது வழக்கம், அதுபோல எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒவ்வொருவருக்கென்றும் ஒரு ஆதரவு வட்டம் இருந்து வருகிறது. அதுபோல தற்போது திமுக மாவட்ட செயலாளர்களான தனது ஆதரவாளர்களை அமர்த்த உதயநிதி ஸ்டாலின் முயன்று வருகிறார், தனக்கு தோதான சில பெயர்களை மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாவட்ட செயலாளர் பதவிக்கு உதயநிதி தனது ஆதரவாளர்கள் 3 பேரை பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது, தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் ஜோயல், செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி பொருளாளர் அப்துல் மாலிக் , ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரப்பன், கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், ஈரோட்டைச் சேர்ந்த பிரகாஷ், சென்னையை சேர்ந்த எம்எல்ஏ ஆ.டி சேகர் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான பட்டியலையும் அவர் முதல்வரிடத்திலும் வழங்கி இருப்பதாக தகவல் உள்ளது. 

இதையும் படியுங்கள்: இந்தி வெறி’பிடித்த அமித்ஷாவின் ஆணவப் பேச்சு.. பெரியார் மண்ணில் வேலைக்கு ஆகாது.. மார்தட்டும் வைகோ.

உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ள அத்தனை பேரின் பெயரும் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூனப்படுகிறது, அதாவது திமுக மாவட்ட செயலாளர்கள் பதவிகளில் பல ஆண்டுகளாக ஒரு சிலரே இருந்துவரும் நிலையில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்றால் இளையவர்களை பதவியிறக்க வேண்டும் என்ற முயற்சியில் உதயநிதி இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

உதயநிதி புதியவர்களின் பெயர்களை பரிந்துரைத்திருப்பது ஏற்கனவே உள்ள சீனியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர் அணி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் பதவிகளில் அமர்த்த வேண்டும், அதன் மூலம் தனது இளைஞர் அணிக்கு உத்வேகத்தைக் கொடுக்க முடியும் என்பதால்  உதயநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 
 

click me!