தமிழகத்தில் இந்த இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னல் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Published : Apr 26, 2021, 02:41 PM IST
தமிழகத்தில் இந்த இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னல் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

சுருக்கம்

28.04.2021 முதல் 30.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

பீகார்  முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை )  வளிமண்டல சுழற்சி காரணமாக
26.04.2021, 27.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

28.04.2021 முதல் 30.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): குன்னூர்  (நீலகிரி) 3,  குந்தா பாலம்  (நீலகிரி), சிவலோகம்  (கன்னியாகுமரி) தலா 2, போடிநாய்க்கனுர் (தேனி), அவலாஞ்சி  (நீலகிரி), குழித்துறை  (கன்னியாகுமரி) தலா  1. பதிவாகி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!