தூத்துக்குடி மக்களின் ஒத்துழைப்போடுதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிகள் கிடுக்குப்பிடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 26, 2021, 1:55 PM IST
Highlights

ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு எதையும் செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மக்களின் ஒத்துழைப்போடு தான் இதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கும் தமிழக அரசு உறுதியளித்துள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான உத்தரவை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்   கூறியதாவது:  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் பேட்டி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே அழைத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் பிரதானமாக இருக்கும் அனைத்து கட்சியையும் அழைத்திருக்கலாம் என்று கோரிக்கை வைத்தோம். ஸ்டெர்லைட் ஆலையை மொத்தமாக அரசு கையகப்படுத்தி செயல்படுத்தலாம் என்று கூறினோம். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ் நிலையில், தமிழக அரசு ஏற்படுத்தும் கண்காணிப்பு குழு தலைமையில் ஆலையை செயல்படுத்த வேண்டும், 

முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்திற்கு தான் முதற்கட்டமாக ஆக்சிஜன் வழங்க வேண்டும், ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு எதையும் செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மக்களின் ஒத்துழைப்போடு தான் இதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கும் தமிழக அரசு உறுதியளித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. 

அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் சூழலில், அதனை பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கதோடு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியது. தமிழக அரசு சார்பில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மோடி சர்கார் வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் கண்காணிப்பில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்களுக்கு வேதாந்தா நிறுவனம் திறக்கப்படும். தமிழகத்திற்கு போக தான் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப வேண்டும். மின்சாரத்தை மின்சார வாரியம் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று தெரிவித்தோம். 
 

click me!