மதுரை ஆதீனத்தை மிரட்டி நீங்க.. விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அமைச்சரை எச்சரிக்கும் அண்ணாமலை?

Published : Jun 08, 2022, 07:58 AM IST
மதுரை ஆதீனத்தை மிரட்டி நீங்க.. விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அமைச்சரை எச்சரிக்கும் அண்ணாமலை?

சுருக்கம்

முதல்வரின் வழிகாட்டுதலால் நாங்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாக கருதக்கூடாது, எங்களுக்கும் பாயத் தெரியும் மதுரை ஆதினம் அரசியல்வாதி போல பேசிக்கொண்டு இருப்பதை இந்து சமய அறநிலைத்துறை ஒரு போதும் அனுமதிக்காது என எச்சரிக்கும் வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியிருந்தார்.

மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொடர்பாக மதுரை ஆதீனம் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தாலும், அதன்பிறகு தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், இந்து சமய அறநிலையத்துறையையும் மதுரை ஆதீனம் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதனால், மதுரை ஆதீனத்திற்கும், தமிழக அரசு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஏற்பாட்டில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்து கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்க வேண்டும் ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார். ஆதீனங்கள் மடாதிபதிகள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள் அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும், துறவிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார். கோவில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது, அரசியல்வாதிகள் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் மாறி வருகிறது என்றார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்திருந்தார்.

அதில், தமிழகத்தில் ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதினம் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மதுரை ஆதினம் தொடர்ந்து இதுபோல் பேசி வந்தால், பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.  முதல்வரின் வழிகாட்டுதலால் நாங்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாக கருதக்கூடாது, எங்களுக்கும் பாயத் தெரியும் மதுரை ஆதினம் அரசியல்வாதி போல பேசிக்கொண்டு இருப்பதை இந்து சமய அறநிலைத்துறை ஒரு போதும் அனுமதிக்காது என எச்சரிக்கும் வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியிருந்தார். 

இதனையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும். சிதம்பரம் கோயில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!