அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு.. முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

Published : Jun 08, 2022, 07:26 AM IST
 அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு.. முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 23-ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான எஸ்.சூர்யமூர்த்தி என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் தருமாறு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 23-ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான எஸ்.சூர்யமூர்த்தி என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் விதிகளுக்கு முரணாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ அல்லது கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை. சிவில் நீதிமன்றத்துக்குத்தான் உரிமை உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

இதுநாள் வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அதேபோல அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. எனவே கட்சி விதிகளுக்குப் புறம்பாக வரும் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு 4வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்ற நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதில் தருமாறு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!