மயானங்களில் பணியாற்றுபவர்களும் கொரோனா முன்களப் பணியாளர்கள் தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Published : May 16, 2021, 03:30 PM IST
மயானங்களில் பணியாற்றுபவர்களும் கொரோனா முன்களப் பணியாளர்கள் தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சுருக்கம்

தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- மயானங்களில் பணியாற்றுபவர்களும் கொரோனா முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர். மயானப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது போல தகன மேடைகளில் பணிபுரிபவர்களுக்கும் உதவி தொகை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் மற்றும் பல்வேறு உயர் அலுவலர்களுடன் கலந்துபேசி, தேவையற்ற வகையில் இதுபோன்ற மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், வல்லுநர் குழுவை மிக விரைவில், இன்றோ, நாளையோ அமைத்து அவர்களின் மூலம் அறிவியல்பூர்வமான அறிவுறுத்தல்களை அனைத்து மருத்துவர்களுக்கும் விடுக்க இருக்கிறோம்.

தேவையற்ற நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் கூட்டம் கூடுவது நோய் பரவ வழிவகுக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!