குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... ஊரடங்கு முடிந்ததும் மதுபானங்களின் விலை உயருகிறது?

By vinoth kumarFirst Published May 16, 2021, 2:50 PM IST
Highlights

கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தமிழக அரசுக்கு 2900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கிற்கு பிறகு மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தமிழக அரசுக்கு 2900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கிற்கு பிறகு மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை சுனாமி வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காரணமாக தமிழக அரசுக்கு 2900 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 15 நாட்களில் டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் 2020 கோடி ரூபாய் வருமானம் முடங்கியுள்ளது. 

மேலும் பத்திரபதிவு மூலமாக வரவேண்டிய 500 கோடி ரூபாயும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாய் 386 கோடி ரூபாயும் முடங்கியுள்ளது. ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை 75 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக பெட்ரோல்  நிலைய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் மூலமாகவே அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இதனால், அரசின் வருவாயை வருங்காலத்தில் ஈடுகட்டும் வகையில் ஊரடங்குக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு பிறகு மீண்டும் மதுபானங்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

click me!