#BREAKING டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 16, 2021, 1:12 PM IST
Highlights

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு  ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு  ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில்  கொரோனா முதல் அலையை விட 2வது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில், 6,430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 337 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மே 24ம் தேதி காலை 5 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றார்.

டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது. முழு ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!