சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் திமுகவில் உள்ள சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் - தமிழிசை காட்டம்

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 11:08 AM IST

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் திமுகவில் உள்ள சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவில் உங்களால் தலைமை பொறுப்பிற்கு வரமுடியுமா என்று எம்.பி. ஆ.ராசாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.


புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

Latest Videos

அப்போது பேசிய அவர், புதுச்சேரி எல்லா விதத்திலும் முன்னேறி வருகிறது. மிக குறுகிய காலத்தில், 10 நாட்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்ய முடிந்தது எனக்கு கிடைத்த பாக்கியம். இதற்கு நமது பிரதமர் அலுவலகம், உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சகம், அலுவலகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 

காதலியின் திருமணத்தை நிறுத்தை காதலியின் தந்தையை கத்தியால் குத்திய காதலன்

மேலும் நீட்டில் கடுமையாக உழைத்துவர்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சனாதனம் என்றாலே தவறாக கருத்து முன்னெடுத்து வருகின்றார்கள்.  சனாதனம் ஒழுக்கத்துடன் கூடிய வாழ்வியல் முறை. சனாதனம் என்றாலே சாதி என்பது தானா? அப்படி என்றால் நீங்கள் ஜாதிக்கு இடம் கொடுக்காதீர்கள். 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராமல் பாலியல் இச்சையை வெளிப்படுத்திய உறவினர்; கோவையில் பரபரப்பு

ஜாதி கேட்காதீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறேன் என்றால் அடி மட்டத்தில் இருப்பவர்களை ஏன் கட்சித் தலைவர்களாகவோ அல்லது மேலே கொண்டு வர மறுக்கிறார்கள். உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை ஒழியுங்கள்,  உங்கள் கட்சியில் அடிமட்டத்தில் உள்ளவர்களை தலைவராக்க முடியுமா என எம்.பி. ஆ.ராசாவுக்கு கேள்வி எழுப்பினார். கடைசியாக நான் கேட்கிறேன் ராசா அவர்களே, உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

click me!