அதிமுகவை இபிஎஸ் எப்படி கைப்பற்றினார் தெரியுமா? கொடநாடு வழக்கில் இந்த 5 பேருக்கு தொடர்பு.. தனபால் பகீர்.!

By vinoth kumar  |  First Published Sep 6, 2023, 8:28 AM IST

இந்த சம்பவத்தில் எனது தம்பி ஈடுபட எனது உறவினர்கள் 3 பேர் மூளை சலவை செய்துள்ளார்கள். என் தம்பியிடம் ரூ.25 கோடி பேரம் பேசி இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக  பேரம் பேசப்பட்ட ரூ.25 கோடியை கேட்டபோது  என் தம்பியை எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் சரமாரியாக தாக்கிய பின்புதான் ஆத்தூரில் அவர் உயிரிழந்தார். 


கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர், 2 முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நபர்கள் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது என ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.  இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்கிடையே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி மர்மமான முறையில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கொடநாடு கொள்ளை இபிஎஸ் சொல்லியே நடந்தது! என்னுடை தம்பி விபத்தில் இறக்கவில்லை! திட்டமிட்ட சதி! கனராஜ் அண்ணன்

 

மேலும் 2017ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அங்கு பணியாற்றிய சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். கொடநாடு வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கொடைநாடு வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

 

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அண்மையில் என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க;-  இபிஎஸ் கொடநாடு குறித்து எழுத வேண்டாம் சொன்னார்.. பகீர் உண்மையை போட்டுடைத்த மருது அழகுராஜ்.. !

 

இந்நிலையில், நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால்;-  கொடநாடு வழக்கில் சிபிசிஐடி என்னை விசாரிக்க வேண்டும் என்று ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி உள்ளார்கள். சிபிசிஐடி என்னை விசாரித்தால் கொடநாடு வழக்கு தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் சொல்ல தயாராக உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக எனது தம்பி கனகராஜ் என்னிடம் கூறிய அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாக அளிக்கத் தயாராக உள்ளேன்.

இந்த சம்பவத்தில் எனது தம்பி ஈடுபட எனது உறவினர்கள் 3 பேர் மூளை சலவை செய்துள்ளார்கள். என் தம்பியிடம் ரூ.25 கோடி பேரம் பேசி இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக  பேரம் பேசப்பட்ட ரூ.25 கோடியை கேட்டபோது  என் தம்பியை எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் சரமாரியாக தாக்கிய பின்புதான் ஆத்தூரில் அவர் உயிரிழந்தார். என்னை யாரும் இயக்கவில்லை, தனி மனிதனாகதான் நான் உள்ளேன். அந்த 5 பைகளிலும்தான் அனைத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆவணங்கள் உள்ளது. அதை வைத்துதான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். முன்னாள் முதல்வர், 2 முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நபர்கள் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. 

 

முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கொடநாடு பங்களாவில் இருந்து எடுப்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். இதில், முன்னாள் முதல்வர், 2 முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நபர்கள் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது என கனகராஜின் அண்ணன் தனபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

click me!