இந்த நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை..!! ஆய்வில் அதிரடி.!!

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2020, 10:37 AM IST
Highlights

காசநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காச நோய்க்கான மருந்து எடுத்துக் கொண்ட நோயாளிகளில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

காசநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காச நோய்க்கான மருந்து எடுத்துக் கொண்ட நோயாளிகளில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் போன்று இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்பை மறைமுகமாகவும், தீவிரமாகவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோய் காசநோய். இந்தியாவில் நாளொன்றுக்கு 1,150 பேரையும் வருடத்திற்கு 4 லட்சம் பேரின் உயிரையும் பலிவாங்குகிறது காசநோய். 

காற்றில் பரவும் கொடூரமான இந்நோயை தடுக்கத்தான், பிசிஜி தடுப்பூசிகள் குழந்தை பிறந்த உடனே போடப்படுகின்றது. 1940 களுக்கு பிறகு இந்தியாவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காச நோய் தடுப்பூசி போடப்படுகிறது. நமது அனைவரின் வலது கையின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள தழும்பு தான் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு அடையாளம், இந்த தடுப்பூசியை உலகில் இந்தியா போன்ற நாடுகள் முழுமையாக பயன்படுத்துகின்றன. பிசிஜி தடுப்பு ஊசியைப் பயன்படுத்தும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

அதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அதுபற்றி ஆய்வையும் தொடங்கியுள்ளது, தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காச நோய்க்கான மருந்து எடுத்துக் கொண்ட நோயாளிகளில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. காச நோயானது பாக்டீரியா தொற்றால் ஏற்படக் கூடியது அதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஜீஜி வகை ஆன்டிபாடி களை ஏற்படுத்துவதால், அதில் உள்ள ஜீ வகை தடுப்பு சக்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

 

click me!