தோப்பு வெங்கடாச்சலத்தின் எடப்பாடி விசுவாசம்: மகிழ்ச்சியில் திளைத்த செங்கோட்டையன்!

 
Published : May 07, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
தோப்பு வெங்கடாச்சலத்தின் எடப்பாடி விசுவாசம்: மகிழ்ச்சியில் திளைத்த செங்கோட்டையன்!

சுருக்கம்

thoppu faith in edappadi

எடப்பாடியை அரசிலுக்கு கொண்டு வந்து அவர் முன்னேற வழி வகுத்தவர் செங்கோட்டையன். ஆனால், எடப்பாடி, அதிமுகவில் முக்கிய இடத்தை எட்டிப்பிடித்த பின்னர், செங்கோட்டையனை அரசியலில் தலை எடுக்க முடியாதவாறு ஓரம் காட்டினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவின் வருகையை அடுத்தே, செங்கோட்டையன் மீண்டும் அமைச்சராகி, தமது இருப்பை காட்டி கொண்டிருக்கிறார். ஆனாலும், முதல்வர் எடப்பாடி, அவ்வப்போது, பலவிஷயங்களில் அவரை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார்.

அதே பாணியில், தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாச்சலத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனால், அவரை அமைச்சர் பதவியை விட்டு நீக்க ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால், அப்போது ஐவர் அணியில் முக்கியமானவராக இருந்த எடப்பாடி தலையீட்டின் பேரில் தோப்பு வெங்கடாச்சலத்தின் அமைச்சர் பதவி காப்பாற்றப்பட்டது.

அதன் பின்னரும், தோப்பு மீது பல புகார்கள் குவிந்த போதும், ஜெயலலிதாவின் கவனத்திற்கு போகாதவாறு, பார்த்துக்கொண்டவரும் எடப்பாடிதான்.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தோப்பு வெங்கடாச்சலம், ஒரு வேளை, செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானால், மாவட்டத்தில்  தமது செல்வாக்கு சரிந்துவிடும் என அஞ்சினார்.

அவர் எதிர்பார்த்தது போலவே, செங்கோட்டையனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த தோப்பு, எடப்பாடியை எவ்வளவோ நச்சரித்தும், அவரால் அமைச்சர் பதவியை பெறமுடியவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த தோப்பு, எடப்பாடிக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். எடப்பாடிக்கு எதிராக பேட்டி கொடுப்பதிலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பதிலும், தமக்கு 15 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருப்பதாக கூறி மிரட்டுவதிலும் தோப்பு தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

தோப்பு வெங்கடாச்சலத்தின் இத்தகைய நடவடிக்கைகள், எடப்பாடி தரப்பினரை கவலை அடைய செய்துள்ளது. ஆனால், செங்கோட்டையன் தரப்பை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

செங்கோட்டையனால் உருவாக்கப்பட்ட எடப்பாடி, அவருக்கு எதிராக  திரும்பினார். எடப்பாடியால். வளர்க்கப்பட்ட  தோப்பு வெங்கடாச்சலம் இன்று, அவருக்கு எதிராக களமிறங்கி உள்ளார்.

அதனால், "நேற்று நான், இன்று நீ" என செங்கோட்டையன்  மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!