தொண்டாமுத்தூரை தொடக்கூட முடியாத திமுக... அடிச்சு தூக்கும் வேலுமணி... பின்னடைவில் சிவசேனாபதி...!

By vinoth kumarFirst Published May 2, 2021, 11:14 AM IST
Highlights

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 5,046 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி 5,046 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போது திமுகதான் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு அதிமுக சார்பாக அமைச்சர் எஸ்.பி வேலுமணியும்,  திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் இந்த தொகுதியில் கடும் போட்டி என்று நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5046 வாக்கு வித்தியாசத்தில் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இங்கு பின்னடைவை சந்தித்துள்ளார். 

தற்போது நிலவரப்படி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 9,879 வாக்குகளும், திமுக வேட்பாளர்  கார்த்திகேய சிவசேனாபதி 4,833 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக 103 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

click me!