பாஜக தொண்டர்களுக்கு எச்.ராஜா கொடுத்த பயங்கர அதிர்ச்சி.. காரைக்குடியில் கலக்கும் காங்கிரஸ்..

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 10:51 AM IST
Highlights

பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக வேட்பாளரை விட 2,986 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். 

பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக வேட்பாளரை விட 2,986 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச். ராஜாவைவிட அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் .மாங்குடி 5 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணப்பட்டு வருகிறது காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வழக்கமாக தேசிய அளவில் கீரியும், பாம்புமாக காங்கிரஸ் பாஜக இருந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- திமுக இடையே நேரடி போட்டி என்றாலும்கூட பாஜக காங்கிரசுக்கு இடையேயான மோதல் தமிழ்நாட்டிலும் இருந்தே வருகிறது.  அந்த வகையில் தொடர்ந்து பாஜக திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறது. 

அதேபோல் சட்டமன்ற  தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பல்வேறு வியூகங்களை  வகுத்து தேர்தலை சந்தித்தது, அந்த வகையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் களம் இறக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் பாஜக இடையே காரைக்குடியில் அனல்பறக்கும் பிரச்சாரம் நடந்தது. 

இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் பாஜக நேரடியாக மோதிக்கொண்டதில், வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளரான எஸ் மாங்குடி 5 ஆயிரத்து 409 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச். ராஜா 2423 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் உள்ளார். சுமார் 2986 வாக்கு வித்தியாசத்தில் எச். ராஜா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

click me!