அதிமுக - திமுக இடையே கடும் போட்டி... அதிமுக அமைச்சர்களின் முன்னிலை, பின்னடைவு நிலவரம் இதோ....!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 10:37 AM IST
Highlights

அதிமுக அமைச்சர்களைப் பொறுத்தவரை அமைச்சர்கள் பலர் முன்னிலையிலும், சிலர் பின்னடைவையும் சந்தித்து வருகின்றனர். 10 மணி நிலவரப்படி இதுகுறித்த விரிவான தகவல்கள் தொகுதி வாரியாக இதோ.... 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 128 தொகுதிகளிலும், அதிமுக 92 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக அமைச்சர்களைப் பொறுத்தவரை அமைச்சர்கள் பலர் முன்னிலையிலும், சிலர் பின்னடைவையும் சந்தித்து வருகின்றனர். 10 மணி நிலவரப்படி இதுகுறித்த விரிவான தகவல்கள் தொகுதி வாரியாக இதோ.... 


முன்னிலை: 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 10,763 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 233 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 2.390 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன் 2,157 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.  

விராலிமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 5,156 வாக்குகளை பெற்றுள்ள விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் பழனியப்பனை  (2,619) விட 2,537 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு 2,607 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் தினகரன் 2,183 வாக்குகளுடன் தோல்வி முகம். 

நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 4,574 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஜோதிராமனை விட 861 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் 2,069 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எம்.சி.சம்பத் 12,982 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அய்யப்பன் 10,913 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் 695 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜு 1,116 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 


பின்னடைவு: 


ராயபுரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி 2,775 வாக்குகளும், ஜெயக்குமார் 2,073 வாக்குகளும் பெற்று 702 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். 

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பின்னடைவு. திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் 4,192 வாக்குகளும், ராஜேந்திர பாலாஜி 2,283 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே 1909 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. 

ஆவடியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் 4009 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார். பாண்டியராஜன் 6,320 வாக்குகளும், திமுக வேட்பாளர் சாமு.நாசர் 10, 329 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஓ.எஸ்.மணியன் 3.615 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் 3,818 வாக்குகளையும் பெற்று 203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,122 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் 7,015 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. 

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் திமுக வேட்பாளர் கணபதியை விட 1,073 வாக்குகளைப் பொற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். 

click me!