சறுக்கிய அதிமுக... பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 10:33 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 118  தொகுதிகளையும் தாண்டி முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 118  தொகுதிகளையும் தாண்டி முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு தொகுதியில் முன்னிலை பெற்று வந்தனர். தற்போது, நிலவரப்படி திமுக கூட்டணி 130 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ஓட்டு எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. திமுக 108 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 4 , மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

அதேபோல், அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 61 இடங்களிலும் பாமக 11, பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. 

click me!