காட்பாடி தொகுதியை நீங்க என்ன மொத்தமா குத்தகைக்கா எடுத்துருக்கீங்க? துரைமுருகனை முந்திய அதிமுகவேட்பாளர் வி.ராமு

By karthikeyan VFirst Published May 2, 2021, 10:06 AM IST
Highlights

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதுவரை எண்ணப்பட்டதில், திமுக கூட்டணி 126 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 89 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 8 முறை(மொத்தமாக 9 முறை) வெற்றி பெற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்த முறை பின்னடைவை சந்தித்துள்ளார்.

காட்பாடி தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அந்த தொகுதியின் பிரதிநிதியாக பல்லாண்டுகளாக சட்டசபைக்கு சென்ற துரைமுருகன், திமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ள இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு 6918 வாக்குகளையும் துரைமுருகன் 5609 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 
 

click me!