தோல்வியை நோக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... கதறவிடும் காட்பாடி..!

By Thiraviaraj RMFirst Published May 2, 2021, 10:00 AM IST
Highlights

போடிநாயக்கனூர் தொகுதி முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்று வருகின்றனர். கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் பின்னடவை சந்தித்து வருகிறார்.

கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, போடிநாயக்கனூர் தொகுதி முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்று வருகின்றனர். கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் பின்னடவை சந்தித்து வருகிறார்.

 

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.  தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் முன்னிலை வகிக்கிறார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். 
 
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 115 தொகுதிகளிலும் அதிமுக அணி 88 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 54  தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 79, காங்கிரஸ் கூட்டணி 56, பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 129 தொகுதிகளிலும், பாஜக 121 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

click me!