பட்டையை கிளப்பும் பழனிசாமி... எடப்பாடியை எட்டிப்பிடிக்க முடியாத திமுக வேட்பாளர்..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 9:44 AM IST
Highlights

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி 10,783 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி 3,325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டதால் எடப்பாடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றது. எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

தற்போது நிலவரப்படி பழனிசாமி 17,486 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 6,703 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். தற்போது நிலவரப்படி திமுக 113 இடங்களில், அதிமுக 83 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

click me!