கொளத்தூரில் அடித்து ஆடும் ஸ்டாலின்.. போடியில் எகிறிய ஓபிஎஸ்.. தள்ளாடும் தங்க தமிழ்ச் செல்வன்..

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 9:40 AM IST
Highlights

அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 1597 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வெறும் 603 வாக்குகள் பெற்று சுமார் 994 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார்.  

ஸ்டார் தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் மிகவும் பின்தங்கி உள்ளார்.

அதேபோல மற்றொரு முக்கிய தொகுதியான  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிகள் ஓபிஎஸ் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலை வகிக்கிறார். 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி குறைந்தது 180 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் எனவும் தெரிவித்தன. இந்நிலையில் வழக்கம்போல தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஸ்டார் தொகுதியாக கருதப்படும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 1597 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வெறும் 603 வாக்குகள் பெற்று சுமார் 994 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார். அதேபோல மற்றொரு ஸ்டார்ட் தொகுதியாக கருதப்படும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் 2,520 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் 2157 வாக்குகள் பெற்று சுமார் 363 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார். 
 

click me!