முதல் முறையாக சட்டமன்றத்திற்கு செல்ல கமல்ஹாசனுக்கு வாய்ப்பு... மகிழ்ச்சியில் பாஜக..!

Published : May 02, 2021, 09:23 AM IST
முதல் முறையாக சட்டமன்றத்திற்கு செல்ல கமல்ஹாசனுக்கு வாய்ப்பு... மகிழ்ச்சியில் பாஜக..!

சுருக்கம்

திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.   

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா முன்னிலை வகித்து வருகிறார். சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமி (அதிமுக) பின்னடைவு- திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்து வருகிறார்.  திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை வகித்து வருகிறார். 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். தபால் வாக்கு.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரியில் காங். வேட்பாளர் ஹசன் முன்னிலை வகிக்கிறார்கள். கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார். நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை வகிக்கிறார்.

 

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் முன்னிலை வகிக்கிறார்.  ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!