திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. விடாமல் விரட்டும் அதிமுக.. கோவை தெற்கில் அடித்து தூக்கும் கமல் ஹாசன்.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 9:15 AM IST
Highlights

சென்னை சைதாப்பேட்டை தொகுதிகள் திமுக சார்பில் போட்டியிட்ட  மா சுப்ரமணியன் 2673 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி 1.900 வாக்குகளை பெற்று பின்னணியில் உள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டது.  ஆனால் தமிழகம் முழுவதும் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 124 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.அதில் 13 கூட்டணிக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர், ஆக மொத்தத்தில் திமுக 187 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டது, 

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு  தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 3  தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஃபார்வார்ட் பிளாக் ,மக்கள் விடுதலை கட்சி ஆகியவைகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வழக்கம்போல முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக திமுக கூட்டணி 54 தொகுதிகளிலும், அதிமுக 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆனால் மொடக்குறிச்சியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னடைவில் உள்ளார். 

சென்னை சைதாப்பேட்டை தொகுதிகள் திமுக சார்பில் போட்டியிட்ட  மா சுப்ரமணியன் 2673 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி 1.900 வாக்குகளை பெற்று பின்னணியில் உள்ளார். அதேபோல சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தா.மோ அன்பரசன் 5,750 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர்  பா. வளர்மதி3,500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் 1397 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமார் காங்கிரஸ் 1,145 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். 
 

click me!