கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை..! ஃப்ரேம்லயே இல்லாத டிடிவி தினகரன்

By karthikeyan VFirst Published May 2, 2021, 9:39 AM IST
Highlights

கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் இருக்கிறார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஃப்ரேமிலேயே இல்லை.
 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி குறைந்தது 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், அதிமுக அதளபாதாளத்தில் இருப்பதை போலவும் முடிவுகள் வெளியிட்டன. ஆனால் நிஜத்தில் கள நிலவரம் அப்படியில்லை. திமுகவிற்கு அதிமுக செம டஃப் ஃபைட் கொடுத்துவருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், திமுக கூட்டணி 75 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 63 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டம் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.

அதிமுக செல்வாக்கு மிகுந்த தென் மாவட்டங்களில் அமமுக கணிசமான வாக்குகளை பிரித்திருந்தாலும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டஃப் ஃபைட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் ஃப்ரேமிலேயே இல்லை.

கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து தினகரன் போட்டியிட்டார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிக்கிறார். சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் அடுத்த இடத்தில் உள்ளார். தினகரன் அந்த ஃப்ரேமிலேயே இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன  தினகரன், இந்த தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிட்ட நிலையில், பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

click me!