ஆயிரம் விளக்கில் பின் தங்கினார் குஷ்பு.. அசால்ட் செய்தார் மருத்துவர் எழிலன்.. திமுக அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 10:09 AM IST
Highlights

இந்நிலையில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் எழிலன் 3,330 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை குஷ்பு 1356 வாக்குகள் பெற்றுள்ளார்.  

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நடிகை குஷ்புவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்  எழிலனை விட குஷ்பு 1973 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஸ்டார் தொகுதி என்றால் ஒரு பேச்சுக்கு மட்டுமல்ல சினிமா ஸ்டாராக குஷ்பூ களமிறங்கிய ரியல் ஸ்டார் தொகுதியாகவே விளங்குகிறது ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி. அத்தொகுதியில் குஷ்புவை எதிர்த்து திமுக வேட்பாளரும் மருத்துவருமான டாக்டர்.எழிலன் போட்டியிட்டார். இத்தொகுதியில் சென்னை பெருவெள்ளம், தானே புயல், நீலம் புயல் என பல நெருக்கடியான நேரங்களில் அத்தொகுதி மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றியவர் எழிலன். அந்த அடிப்படையில் திமுக தலைமை ஆயிரம்விளக்கு தொகுதியில் டாக்டர் எழிலனை அத்தொகுதியில் நிறுத்தியது. 

ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி திமுகவின்  கோட்டை என அண்ணா காலத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு திமுகவுக்கு சாதகமான தொகுதியாக ஆயிரம்விளக்கு இருந்துவருகிறது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியைக் எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், பாஜகவின் ஸ்டார் வேட்பாளரான நடிகை குஷ்பூ சுந்தர் சி அங்கு களமிறக்கப்பட்டார். அத்தொகுதியில் பிரச்சாரத்தின் போது திமுக -பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது.  அங்கு நிச்சயம் மருத்துவர் எழிலனுக்கு குஷ்பூ டஃப் கொடுப்பார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இது காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் எழிலன் 3,330 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை குஷ்பு 1356 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் 1973 வாக்கு வித்தியாசத்தில் குஷ்பூ பின்னடைவை சந்தித்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி குறைந்தது 180 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியது குறிப்பிடதக்கது.  

 

click me!