இந்தாண்டு தமிழக மக்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்..!! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்..!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2020, 10:54 AM IST
Highlights

சேலம் அரசு மருத்துவமனை உள்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை இருந்ததாகவும், அதை சரி செய்ய மருத்துவமனை முதல்வர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்தாண்டு மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை குறைவு எனவும், தமிழகத்தில் கொரனோ பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடைந்து தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மணிப்பூரை சேர்ந்த நபருக்கு இதயத்தில் கத்தி குத்து ஏற்பட்டு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு அரசு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவமனை உள்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை இருந்ததாகவும், அதை சரி செய்ய மருத்துவமனை முதல்வர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகதெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், இந்தாண்டு 1800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தாண்டு மழைக்கால தொற்று நோய்கள் குறைந்திருப்பதாக தெரிவித்தார்.சென்னையில் சமூக இடைவெளியை வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும்,  15 நிமிடங்கள் தொடர்ந்து சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR மட்டுமே சிறந்த பரிசோனை முறை என்றும் CT ஸ்கான் செய்வதால் கொரோனா தொற்றை கண்டறிய முடியாது என தெரிவித்தார்.
 

click me!