ஜெயலலிதா பாசம்.. எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு.. மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆனது?

By Selva KathirFirst Published Oct 22, 2020, 10:09 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திடீரென ஜெயலலிதா மரண விவகாரத் கையில் எடுத்திருப்பதுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறி தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரத்தை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திடீரென ஜெயலலிதா மரண விவகாரத் கையில் எடுத்திருப்பதுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறி தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரத்தை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

தமிழக அரசியல் களம் எப்போதுமே சூடாகவே இருக்கும். இதற்கு காரணம் இரு பெரும் முக்கிய கட்சிகள் எலியும் பூனையுமாக இருப்பது தான். அதாவது திமுக – அதிமுக இடையிலான மோதல் தேர்தல் அரசியல் என்பதை தாண்டி பல்வேறு விஷயங்களிலும் மிகவும் ஆழமாக வேறூன்றிப் போய் இருக்கும். உதாரணமாக அதிமுகவில் பொறுப்பில் இருக்க கூடிய ஒரு நபர் திமுக பிரமுகரின் இல்ல விஷேசத்திற்கு செல்வதெல்லாம அரிதினும் அரிதாகும். அதிமுக எம்எல்ஏவாக இருந்த பிறகு திமுகவில் இணைந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி.

அவர் மறைந்த போது அவரது மகன் இன்பத் தமிழன் அதிமுகவில் இருந்தார். அதுவும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இந்த ஒரே காரணத்திற்காக உயிரிழந்த தந்தையை கூட சென்று இன்பத் தமிழன் பார்க்கவில்லை. இதற்கு காரணம் தாமரைக்கனி திமுக – இன்பத்தமிழன் அதிமுக என்பது மட்டுமே. இந்த அளவிற்கு இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் படு உக்கிரமாக இருக்கும். சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்தார் என்பதற்காக அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றினார் சசிகலா.

இப்படி திமுக – அதிமுக மோதல் பற்றி பக்கம் பக்கமாக கூறிக் கொண்டே போகலாம். ஆனால் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. அதன் உச்சமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். வழக்கமாக ஒரு இரஙகல் குறிப்பு தெரிவிப்பதுடன் இந்த விஷயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஸ்டாலின் ஒரு படி மேலே போய் அரசியலில் எதிரியாக இருந்தாலும் தாயை இழந்த ஒரு மகனுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு வித்துட்டுள்ளார்.

இதே போல் ஜெயலலிதா மரண விவகாரத்தையும் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார. திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை விலக்க விசாரணை நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் பேசி வருகிறார். இப்படி திடீரென ஜெயலலிதா மீது ஸ்டாலினுக்கு பாசம் வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தது ஏன்? என்று அடுத்ததடுத்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் எளிமையான முதலமைச்சர், எளிதில எடப்பாடியை யார் வேண்டுமானாலும் அணுகலாம் என ஒரு இமேஜ் உள்ளது. இதே போன்று மு.க.ஸ்டாலின் மீது ஒரு இமேஜை உருவாக்கவே அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறுகிறார்கள். இதே போல் தேர்தல் சமயத்தில் எடப்பாடியை கடுமையாக விமர்சிக்க ஸ்டாலின் திடடமிட்டுள்ளதாகவும் அப்போது அவர் மீது தனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என்று எடுத்துக்கூறவும் அவரது தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல்கூறியதை பயன்படுத்த திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இதே போல் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி மீண்டும் வாக்கு கேட்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்கவே இப்போது முதலே ஜெயலலிதா மறைவை மையமாக வைத்து தனது பிரச்சார களத்தை ஸ்டாலின் தயார்படுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள். அதாவது ஜெயலலிதா மறைவு தொடர்பான ரகசியத் கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் ஸ்டாலின் பிரச்சாரத்தின் மிக முக்கிய விஷயமாக இருக்கும் என்கிறார்கள். இதன் மூலம் ஜெயலலிதாவை எடப்பாடி முன்னிலைப்படுத்துவதை தவிடுபொடியாக்க முடியும் என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்துள்ளாராம்.

click me!