பக்கத்தில் தான் வீடு ஸ்டாலினே வந்துட்டார்.. ஓபிஎஸ் வரலியே? மீண்டும் எடப்பாடியுடன் மோதலா? பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Oct 22, 2020, 10:04 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பக்கத்தில் உள்ள ஓபிஎஸ் தற்போது வரை முதலமைச்சரை நேரில் சந்திக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பக்கத்தில் உள்ள ஓபிஎஸ் தற்போது வரை முதலமைச்சரை நேரில் சந்திக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த வாரம் சேலம் மருத்துவமனையில் காலமானார். இதனை அடுத்து உடனடியாக அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் தாயார் மறைவை தொடர்ந்து சேலம் அருகே உள்ள அவரது சொந்த ஊருக்கு முதலில் அமைச்சர்கள் அனைவரும் படையெடுத்தனர். முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பிறகு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் முதலமைச்சரை வரிசையாக சென்று சந்தித்தனர்.

முதலமைச்சர் தாயார் மறைந்த அன்று நண்பகலில் ஓபிஎஸ் சேலம் சென்று உடலுக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஒரே ஒரு இரங்கல் குறிப்பு மட்டும் அனுப்பிவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார் ஓபிஎஸ். இதனை தொடர்ந்து சுமார் ஐந்து நாட்கள் வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலேயே முகாமிட்டார். தினந்தோறும் அவரை ஏராளமான முக்கிய பிரபலங்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள், மாற்று கட்சியினர், தொழில் அதிபர்கள் என முதலமைச்சரை சந்திக்காத நபர்களே இல்லை.

ஆனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் சேலம் பக்கமே செல்லவில்லை. அதே சமயம் சென்னையில் தனது வழக்கமானபணிகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். மறுநாளே அவரை வீடு தேடிச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதே போன்று அதிமுகவின் எதிர் முகாமில் உள்ள இடதுசாரிகள், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் கூட முதலமைச்சரை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஏன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கூட முதலமைச்சர் வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறினார். ஆனால் முதலமைச்சரின் வீட்டிற்கு பக்கத்திலேயே உள்ள துணை முதலமைச்சர் தற்போது வரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதே போன்று அதிமுகவின் 49வது ஆண்டு விழாவின் போது கூட முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்ச்ர தனித்தனியாகவே விழாக்களில் கலந்து கொண்டனர். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாககூறுகிறார்கள். இது குறித்து விசாரித்த போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் வரும் துறை சார்ந்த சில முக்கிய முடிவுகளை முதலமைச்சர் தன்னிச்சையாக எடுத்ததாக சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் சிறிய அளவிலான கட்டிடங்கள் கட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட துறையில் அனுமதி பெற வேண்டியதில்லை. மாறாக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றால் போதும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் சிறிய அளவிலான கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு இனி ஓபிஎஸ் துறையை யாரும் நாட வேண்டியதில்லை. மாறாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இலாகாவே இந்த விவகாரத்தை அணுகும். இந்த விஷயத்தால் ஓபிஎஸ் அப்செட்டானதாக சொல்கிறார்கள். இதனால் தான் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்ப்பதாக கூறுகிறார்கள்.

click me!