
மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவையின் நிறுவனர் தீபா கூறினார்.
எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் நிறுவனர் தீபா, நேற்று நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரதுட கணவர் மாதவன் உடனிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா, பல்வேறு சூழ்ச்சி வலைகளின் மத்தியில், நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். அதிமுகவை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்றார்.
காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினார்.
நீட் தோடர்பாக செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது என்றார்.
அதிமுகவுக்கு வலிமையான தலைவர்கள் இல்லாததால், பாஜக இயக்குவதாக தோற்றம் உருவாகியுள்ளது. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று தீபா கூறினார்.