அதேபோல், இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யப்படுவதில்லை, அது குறித்து விவாதிக்கப்படுவதும் இல்லை. அதேபோல் பார்களை உடனே திறக்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற அவர், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதால்தான் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவது இல்லை என்றார்.
சட்டத்துக்குப் புறம்பான சில செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படு வதில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், மண்டலங்களைச் சேர்ந்த டாஸ்மாக் முதுநிலை மேலாளர், மாவட்ட பொது மேலாளர் ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது அதில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
இதையும் படியுங்கள்: 5 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து 1 ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தது திமுக.. எடப்பாடி பழனிச்சாமி பகீர்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளை உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்து எந்தவிதமான புகார்களும் வராத வண்ணம் டாஸ்மாக் கடைகள் செயல்பாட வேண்டும் என்றார். எந்த விதமான சட்ட விரோத செயல்கள் இருப்பினும் அதை உடனுக்குடன் மேலாண்மை இயக்குனருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதேபோல ஆய்வுகள் மேற்கொள்ளும் போது அது ரகசியமாகவும் யாருக்கும் தகவல் தெரிவிக்குமாறும் தகவல் தெரிவித்து பிரச்சனைகளை கலைய வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மார்க் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டதில், அதில் 933 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் இதுவரை 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சின்னம்மா தலையில் இடி இறக்கிய எடப்பாடி.
அதேபோல், இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யப்படுவதில்லை, அது குறித்து விவாதிக்கப்படுவதும் இல்லை. அதேபோல் பார்களை உடனே திறக்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற அவர், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதால்தான் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவது இல்லை என்றார். நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளில் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், விரைவில் 32 மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் அதில் தானும் மேலாண்மை இயக்குனரும் இடம்பெறுவோம் என்றார். அதே நேரத்தில் மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு, தமிழகத்தில் வெளிப்படையாக நிர்வாகம் நடக்கிறது, திறந்த மனதுடன் நல்லாட்சி நடைபெறுகிறது, கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என அவர் பேசினார்.