முறைகேடே நடக்கவில்லையா..? 2012ன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறந்துடாதீங்க காங்கிரஸ்காரங்களே... சொல்கிறார் ராஜீவ் சந்திரசேகர்!

 
Published : Dec 21, 2017, 05:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
முறைகேடே நடக்கவில்லையா..? 2012ன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறந்துடாதீங்க காங்கிரஸ்காரங்களே... சொல்கிறார் ராஜீவ் சந்திரசேகர்!

சுருக்கம்

This is what people who pursued the 2G scam had to say about todays acquittal by Trial Court

2 ஜி அலைவரிசை முறைகேட்டு வழக்கில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் போது, இந்த வழக்கை கடும் சிரமங்களுக்கு இடையே வெகுநாட்களாகப் பின் தொடர்ந்தனர் சிலர். அந்த வெகு சிலரில், சுயேச்சை எம்.பி.,யான ராஜீவ் சந்திரசேகர், பத்திரிகையாளர்கள் ஷாலினி சிங், ஜே. கோபிகிருஷ்ணன், சுனில் ஜெயின் உள்ளிட்டோர் இருந்தனர்.

இன்று, கீழமை நீதிமன்றமான சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ தான் தாக்கல் செய்த வழக்கை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 

இந்தத் தீர்ப்பு குறித்து, தங்கள் டிவிட்டர் பதிவுகளில், வெளிப்படையாகவே பலத்த அதிர்ச்சிகளை வெளியிட்டு வருகின்றனர் மேற்சொன்ன நபர்கள் மற்றும் பலர். 

ஆனால் இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு திசைதிருப்பி முற்றிலும் மாற்றிப் போட காங்கிரஸ் எவ்வாறு முயல்கிறது  என்பதைக் குறித்தும்  அவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

சுனில் ஜெய்ன், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸின் மேனேஜிங் எடிட்டர். இவர் தனது டிவிட்டர் பதிவுகளில், இந்த வழக்கில் காங்கிரஸின் தகிடுதத்தங்களை புட்டுப் புட்டு வைக்கிறார். காரணம், தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு எழும்போது, தங்கள் மீதே ஒரு விசாரணை வைக்க, தங்கள் தரப்பு விசாரணை நிறுவனத்தின் மூலம், தங்கள் ஆட்களை வைத்தே விசாரணை நடத்தி, ஒரு தீர்ப்பையும் கொடுக்க வைத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ், இப்போது தங்கள் மீது குறை எதுவும் இல்லை என்று தீர்ப்பை திசை திருப்பி வருகிறது என்று டிவிட்டர் பதிவுகளில் சிலர் வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  

இதனிடையே, சுயேச்சை எம்.பி.,யான ராஜீவ் சந்திரசேகர், தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “10 வருடம் முன்னர், 2007ல் 2ஜி முறைகேட்டை முதல் முதலில் எதிர்கொண்ட முதல் எம்.பி., அப்போது நான்தான். யாருடைய ஆதரவும் இல்லாமல், நாடாளுமன்ற சுயேச்சை  உறுப்பினராக, இதை நான் எதிர்கொண்டேன். அப்போது மிகச் சில ஊடகங்களே இதை வெளியிட்டன. நான் அப்போது குறிவைக்கப் பட்டேன். மிரட்டப்பட்டேன். ஆனால், நான் இதில் பின்வாங்காமல், என் அளவில் உறுதியாக இருந்தேன். காரணம், சுப்பிரமணிய சுவாமி இதை முக்கியமான ஒன்றாக எடுத்துக்  கொண்டார். இதனை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்” என்று கூறியிருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.

இந்தத் தீர்ப்பு குறித்து, எம்.பி., ராஜீவ் சந்திரசேகர் தனது அதிருப்தியை முதலில் டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தினார். 2007ல் தான் எப்படி தனி ஒருவனாக இந்த முறைகேட்டை எதிர்கொண்டேன் என்பதையும், தனக்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையிலும் தான் செயல்பட்ட விதத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த விவகாரம் குறித்து அவர் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில், 2ஜி முறைகேட்டை, ஒயிட்காலர் க்ரைம் எனும் வகையில், நுட்பம் மிகுந்த அறிவாளிகளின் குற்றம் எனும் வகையில் விசாரணை செய்யப்பட்டு, அணுகப் படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த முறைகேட்டை  உறுதியாக அணுகி, இதில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் இதே ரீதியில் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து,  ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் 2010, மே 18ஆம் தேதி அவர் எழுதிய கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதே கட்டுரையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் தனித்துவ செயல்பாட்டைக் குறிப்பிட்ட அவர், பணி ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது அதிகார வளையத்தில் பணியில் இருப்போரை முக்கியமாகக் கருதி, அவர்களை அதிகார மையமாக அரசியலுக்கு அணுக்கமாக இருப்போராகக் கருதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இன்று வெளியான தீர்ப்பு சமூக வலைதளங்களில் பரவலான பின்னர், தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் ஒரு கருத்தைப் பதிவு செய்தார் ராஜீவ் சந்திரசேகர். 

இந்தத் தீர்ப்புக்காக யாரும் ஏமாறத் தேவையில்லை. ஏன் என்று விளக்குகிறேன் என்று குறிப்பிட்டு, இன்று வெளியிடப்பட்ட ஒரு தீர்ப்பானது அரசு தொடர்பான 4 நபர்களின் மீதான நிதி முறைகேடு  குற்றச்சாட்டுகள்தான்! ஆனால், கடந்த 2012ல் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பைப் பார்க்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் அரசுத் தரப்பினால் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறியபோது, தன்னைக் குறை கூறிக் கொண்டிருக்கும் இந்த முறைகேட்டில் இருந்து விசாரணை நீதிமன்றமும் முரண்படாமல் இருந்தது. அது பிப்.2012ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பில் வெளிப்பட்டது. அப்போது, 2ஜி முறைகேட்டில் சிக்கிய தகுதியற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து, மீண்டும் ஏல முறையில் உரிமம் வழங்க உத்தரவிட்டது. 

எனவே, இந்தக் கீழமை நீதிமன்றத் தீர்ப்பை குறிப்பிட்டு, முறைகேடே நடக்கவில்லை என்று குறிப்பிடும் காங்கிரஸ், 2012ம் வருட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிட வேண்டாம், அதை நினைவூட்டுகிறேன் என்று குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார் ராஜீவ் சந்திரசேகர். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!