மோடிக்கும், 2ஜி தீர்ப்புக்கும் சம்பந்தம் இருக்கா? என்னம்மா பதில் சொல்லும் தமிழிசை...!

 
Published : Dec 21, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
மோடிக்கும், 2ஜி தீர்ப்புக்கும் சம்பந்தம் இருக்கா? என்னம்மா பதில் சொல்லும் தமிழிசை...!

சுருக்கம்

2g case verdict tn bjp leader Thamizhisai Soundararajan commented

2ஜி வழக்கு தீர்ப்பினை நீதிமன்ற தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும் என்றும், நீதிமன்ற தீர்ப்புகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை; தலையிடவும் மாட்டார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழ ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான
ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி
உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து திமுக தரப்பு நியாயத்துக்காக கிடைத்த வெற்றி என்று புளங்காங்கிதமடைந்து கருத்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2ஜி வழக்கு தீர்ப்பினை நீதிமன்ற தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும். தனிப்பட்ட முறையில் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தீர்ப்பை தீர்ப்பாகவே மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோதே 2ஜி வழக்கில் விடுதலை என்று தகவல் வெளியானதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழிசை, நீதிமன்ற தீர்ப்புகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை; தலையிடவும் மாட்டார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!