ஆதாரம் இருக்கு ஆனா நிரூபிக்க முடியல...! வேதனை பொங்கும் வானதி!

First Published Dec 21, 2017, 5:05 PM IST
Highlights
2G case verdict Vanathi Srinivasan commented


2ஜி வழக்கைப் பொறுத்தவரை ஆதாரம் இருந்தாலும் நிரூபிக்கப்படாத வழக்காகத்தான் இந்த தீர்ப்பை பார்க்க முடியும் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழ ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான
ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள
சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி
உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து திமுக தரப்பு நியாயத்துக்காக கிடைத்த வெற்றி என்று புளங்காங்கிதமடைந்து கருத்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராஜா, கனிமொழி எம்.பி. விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்கப்படவில்லை என்பதன் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை நிரூபிக்கப்படாத வழக்காகத்தான் பார்க்க முடியும் என்று கூறினார். ஏற்கனவே வழக்குக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த உச்சநீரிமன்றம், டெலிகாம் லைசென்சுகளை கூட ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.  ஆதாரம் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகத்தான் தீர்ப்பு உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறினார்.

click me!