நீதிமன்ற வளாகத்தில் கொலை! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி! வச்சு செய்யும் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Feb 14, 2023, 6:46 AM IST

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர் குற்றம்சாட்டை முன்வைத்து வருகிறார். அதற்கு தகுந்தார் போல சென்னை நகைக்கடையில் கொள்ளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளை சம்பவம் அரங்கேறியது.  


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு  இதுவே சாட்சி இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது என எதிர்க்கட்சி தலைவர் தொடர் குற்றம்சாட்டை முன்வைத்து வருகிறார். அதற்கு தகுந்தார் போல சென்னை நகைக்கடையில் கொள்ளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளை சம்பவம் அரங்கேறியது.  

Latest Videos

இதையும் படிங்க;- ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம்.! அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன் உறுதி

மேலும், கோவை நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த குற்றச் சம்பவங்களை மேற்கோள் காட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை, அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை, போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் தமிழகத்தில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க;-  உங்களுக்கு முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொதிக்கும் எடப்பாடியார்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு  இதுவே சாட்சி இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!