மாடு உதைத்து விட்டால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? cow hug day-ஐ குறிப்பிட்டு மம்தா கேள்வி!!

By Narendran S  |  First Published Feb 13, 2023, 11:25 PM IST

பிப்.14 அன்று பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 


பிப்.14 அன்று பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பிப்.14 ஆம் தேதி அனைவரும் காதலர் தினமாக கொண்டாடும் நிலையில் அன்றைய நாளை பசுக்களை கட்டிப்பிடிக்கும் நாளாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் தெரிவித்தது. இதுக்குறித்து விலங்குகள் நல வாரியம் கடந்த 6 ஆம் தேதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில், பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

Latest Videos

பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இது பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் இந்த அறிவிப்பை விமர்சனம் செய்தனர். அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கூட இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். இதை அடுத்து விலங்குகள் நல வாரியம் தங்களது அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்த நிலையில், பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? 2024 நாடாளுமன்ற தேர்தலில் அராஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் அரசாங்கத்தை நிறுவ வேண்டும். இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது. எல்லை பகுதிகளில் சிலர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அதனால், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

click me!