2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன பிறகு, ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தான் தங்கியுள்ளார் என புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன பிறகு, ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தான் தங்கியுள்ளார் என புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் இன்று (பிப்.13) சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனிடையே புள்ளிவிவரங்களின்படி, 2019 முதல், ராகுல் காந்தி 15 ஆவது முறை வயநாட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு பயணம்: பழங்குடியினர் வீட்டுக்கு சென்றார்
2019 பாராளுமன்ற தேர்தல் முடிவு மற்றும் எம்.பி., ஆன பிறகு, அதாவது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 21 நாட்களில் 14 முறை மட்டுமே தனது தொகுதிக்கு சென்றுள்ளார். தற்போது 15 ஆவது முறை. இந்த 15 முறை பயணங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தனது சொந்த தொகுதியில் தங்கியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி முதல் முறை வருகை புரிந்தார். அப்போது 2019 ஆம் ஆண்டு ஜூன் 7 முதல் 9 வரை அங்கு தங்கினார். அதன்பிறகு, 2019 ஆம் ஆண்டு 3 முறை வருகை புரிந்தார்.
இதையும் படிங்க: மதுபோதையில் காரை இழுத்து சென்ற ட்ரக் ட்ரைவர்.. பதற வைக்கும் வீடியோ !
2020-இல் இரண்டு முறையும், 2021-இல் ஐந்து முறையும், 2022-இல் மூன்று முறையும், 2023-இல் ஒரு முறையும் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தொகுதியில் ராகுல்காந்தி இல்லாவிட்டாலும் ராகுலின் அலுவலகப் பணிகள் சுறுசுறுப்பாக உள்ளது என்று காங்கிரஸார் சொல்லிக்கொள்கின்றனர். அமேதியில் பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்கடிக்கப்பட்ட ராகுல், வயநாடு தொகுதியில் 400,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நிரந்தர தொகுதியான அமேதியில் ராகுலின் தோல்வி காங்கிரசுக்கு பலத்த அடியை கொடுத்தது. 1980 முதல் 2014 வரை நேரு குடும்பத்தின் தலைவர்களின் நிரந்தர இடமாகவும் அமேதி இருந்தது குறிப்பிடத்தக்கது.